இலங்கையின் அரசியல் தலைவர்கள் மற்றும் படையினர் மீது போர்க்குற்றங்களை சுமத்துவதற்கு பிரித்தானியா முயற்சி - ஜீ.எல்.பீரிஸ்

#G. L. Peiris #Sri Lanka President
Reha
2 years ago
இலங்கையின் அரசியல் தலைவர்கள் மற்றும் படையினர் மீது போர்க்குற்றங்களை சுமத்துவதற்கு பிரித்தானியா முயற்சி - ஜீ.எல்.பீரிஸ்

இலங்கையின் அரசியல் தலைவர்கள் மற்றும் படையினர் மீது போர்க்குற்றங்களை சுமத்துவதற்கு பிரித்தானியா அதீத முயற்சிகளை மேற்கொண்டதாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பு - கொள்ளுப்பிட்டியில உள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரியில் இடம்பெற்ற, தெரிவு செய்யப்பட்ட படை அதிகாரிகளின் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அங்கம் வகிக்கும் மற்றும் பேரவையில் சிறிலங்கா தொடர்பான முக்கிய குழுவின் தலைமை நாடாக செயற்படும் பிரித்தானியாவின் இந்த முயற்சி குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், ஜெனிவாவில் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் ஆரம்பமாகவுள்ள 49ஆவது மனித உரிமைகள் பேரவை அமர்வில் சிறிலங்காவின் விடயம் முக்கியமானதாக இருக்கும்.

வன்னியில் 2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளை சிறிலங்கா அரச படையினர் சுற்றிவளைத்த போது பல தகவல்களை, அப்போது சிறிலங்காவில் பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்தில் கடமையில் இருந்த பாதுகாப்பு அதிகாரி லெப்டினன்ட் கேனல் அன்டனி காஸ் சேகரித்தார்.

எனினும் போர்க்குற்றச்சாட்டுக்களின் போது பிரித்தானியா தமது சொந்த பணியாளரின் தகவல்களையே கேள்விக்கு உட்படுத்தியுள்ளதா?.

சிறிலங்காவின் பொறுப்புகூறல் விடயங்களில் அதிக அக்கறை கொண்டுள்ள பிரித்தானியர்களுக்கு அவர்களின் சொந்த பணியாளர்கள் அனுப்பிய தகவல்கள் உதவியிருக்கும்.

மேலும், சர்வதேச சட்டங்களின்படி சிறிலங்காவின் அரச படையினரை சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.