எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு மின்வெட்டு தொடர்பில் CEB தொழிற்சங்கங்களின் கூட்டம் கொழும்பில்

#SriLanka #Power #Time
எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு மின்வெட்டு தொடர்பில் CEB தொழிற்சங்கங்களின் கூட்டம் கொழும்பில்

எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு மின்வெட்டு தொடர்பில் இலங்கை மின்சார சபை விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் நாளைய தினம் தீர்மானிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று வரை மின்வெட்டை மேற்கொள்ள வேண்டாம் என சமீபத்தில் முடிவு செய்யப்பட்டது. நாட்டில் ஏற்பட்டுள்ள மின் நெருக்கடிக்கான காரணங்கள் மற்றும் அதனை எதிர்கொள்வதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க பின்வரும் கருத்துக்களை வெளியிட்டார்.

இதேவேளை, இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பைச் சேர்ந்த அனைத்து தொழிற்சங்கங்களும் தற்சமயம் கூடியுள்ளன.

இது இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பவற்றுக்கு மேலதிக கட்டணத்தை அறவிடுவது தொடர்பில் அரசாங்கம் முன்வைத்துள்ள யோசனை தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்தார்.

ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பவற்றின் மீது கூடுதல் கட்டணம் அறவிடுவது தொடர்பிலும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது அரசாங்கத்தின் இரண்டு பங்காளிக் கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

.