காலியில் நிர்மாணிக்கப்படவுள்ள முதலாவது தொழில்நுட்ப பூங்காவை ஜனாதிபதி பார்வையிடவுள்ளார்

Prathees
2 years ago
காலியில் நிர்மாணிக்கப்படவுள்ள முதலாவது தொழில்நுட்ப பூங்காவை ஜனாதிபதி பார்வையிடவுள்ளார்

காலி தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதுவ நுழைவாயிலுக்கு அருகில் அமைந்துள்ள நாட்டின் முதலாவது தொழில்நுட்ப பூங்காவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வியாழக்கிழமை (17) பார்வையிட உள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டுதலின் கீழ், சுபீட்ச நோக்கு கொள்கை அறிக்கைக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் ஐந்து புதிய தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளன.

காலி மாவட்டத்தில் அமைக்கப்படும் தொழிநுட்ப பூங்காவிற்கு மேலதிகமாக குருநாகல், கண்டி, நுவரெலியா மற்றும் ஹபரணை ஆகிய இடங்களில் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைப்பதன் மூலம் இளைஞர்களின் தொழில்நுட்ப அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்தி, எதிர்கால உலகிற்கு அவர்களை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க, காலி மாவட்டத்தில் முதலாவது தொழில்நுட்ப பூங்காவை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த பெருந்தோட்ட அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன,

இந்த புதிய தொழிநுட்ப பூங்காக்கள் உள்ளுர் கண்டுபிடிப்புகளுக்கு முன்னுரிமை அளித்து தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு தொழில்நுட்ப சேவைகளை ஏற்றுமதி செய்யும் கேந்திர நிலையமாக மாறும் என தெரிவித்தார்.

இந்த புதிய தொழில்நுட்ப பூங்காக்கள் எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தின் முன்னணி இயக்கிகளாகவும் சிறப்பு வணிக சேவைகளுக்கான மையமாகவும் மாறும் என்றும் அவர் கூறினார்.

தொழில்நுட்ப அடிப்படையிலான அறிவார்ந்த சமூகத்தை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு அமைவாக புதிய தொழில்நுட்ப பூங்காக்கள் அடிப்படைத் தேவையாக இனங்காணப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் காலி மாவட்ட மக்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பல தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.

தொழில்நுட்ப பூங்காக்கள் 5G விரிவான தகவல் தொடர்பு வசதிகள் மற்றும் பிற அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன அலுவலக வளாகங்களுடன் பொருத்தப்பட்டுள்ளன. பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் இயற்கையான சூழலுடன் இணைந்த விளையாட்டு, மன மற்றும் உடல் தளர்வு வசதிகளும் இடம்பெறும், மேலும் திறந்தவுடன் 2,000 நேரடி வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.

எனவே, தொழில்நுட்பப் பூங்காக்களை நிறுவுவதன் முக்கிய நோக்கம் இலங்கையை தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கான மையமாக நிலைநிறுத்துவதாகும். இது வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கும், தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் புதுமையின் மூலம் தொழில்துறை சமூக மாற்றத்தை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மேம்பட்ட தொழில்நுட்பம் கொண்ட புதிய நிறுவனங்களை ஊக்குவிக்கவும், ஏற்றுமதி சார்ந்த தொழில்களை ஊக்குவிக்கவும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், அறிவைப் பரப்பவும், சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், வெளிநாட்டு வருமானம் மூலம் தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.