அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் 15.02.2022

Keerthi
2 years ago
அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் 15.02.2022

மேஷம்: 
அசுவினி: நல்ல செயல்களை செய்து கொண்டே இருப்பீர்கள்.
பரணி: தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். எடுத்த விஷயத்தை முடிப்பீர்கள்.
கார்த்திகை 1: பிரச்னை அண்டாது. வியாபாரத்தில் நல்ல லாபம் பார்ப்பீர்கள்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: புதிய வருமான வாய்ப்பு தேடி வரும். பயன் மிக்க நாள்.
ரோகிணி: உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது.
மிருகசீரிடம் 1,2: கலைத்துறையினருக்கு கூடுதல் நன்மைகள் உண்டாகும்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: பிராணிகளின் மீது கருணை வரும். நற்செய்தி கிடைக்கும்.
திருவாதிரை: கவலை ஒன்று தீரும். வெளிநாட்டு வியாபாரம் லாபம் தரும்.
புனர்பூசம் 1,2,3: அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்த்த நன்மை கிடைக்கும்.

கடகம்: 
புனர்பூசம் 4: எதிர்பாலினத்தினரால் நன்மை ஏற்படும். நட்பு வட்டம் விரியும்.
பூசம்: மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களின் செயல் திறன் கூடும்.
ஆயில்யம்: எடுத்த செயல்களில் பின்வாங்காமல் முன்னேறுவீர்கள்

சிம்மம்: 
மகம்: சாதனை செய்து உறவினர் மத்தியில் கைதட்டல் பெறுவீர்கள்.
பூரம்: இத்தனை காலம் காத்திருந்த விஷயம் கனிந்து பலனளிக்கும்.
உத்திரம் 1: சுபநிகழ்ச்சிகள் நடப்பதற்கான அறிகுறிகள் தென்படும்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: உயர்பதவியை எட்டுவீர்கள். பேச்சினால் நன்மை வரும்.
அஸ்தம்: உறவினர்களுடன் இருந்து வந்த உரசல்கள் இன்று முடியும்.
சித்திரை 1,2: பல காலம் தள்ளிப்போட்ட வேலைகளை இன்று முடிப்பீர்கள்.

துலாம்: 
சித்திரை 3,4: இளைஞர்களுக்கு நன்மை உண்டு. கவலை தீரும்.
சுவாதி: பணத்தை கையாளும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
விசாகம் 1,2,3: ஆராய்ச்சி மனப்பான்மை வரும். பேச்சாற்றல் கூடும்.

விருச்சிகம்: 
விசாகம் 4: நண்பர்களை அனுசரித்து செல்வது மிகவும் நல்லது.
அனுஷம்: எதிர்பாராத செலவு வரும். ஆனாலும் மன வருத்தம் அடைய மாட்டீர்கள்.
கேட்டை: குழந்தைகளின் வாழ்வில் குதுாகலம் நிறையும். மகிழ்ச்சி கூடும்.

தனுசு: 
மூலம்: சமூக வலைதளங்களில் கவனமாக இருங்கள். வம்பு பேச வேண்டாம்.
பூராடம்: புதியவர்களுடன் பேச்சைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
உத்திராடம் 1: திட்டமிட்ட பயணம் தள்ளிப்போகும். சேமிப்பில் ஆர்வம் கூடும்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: புதிய நண்பருடன் விழிப்புடன் பழகுவது நல்லது.
திருவோணம்: குழந்தைகளாலும், வாழ்க்கைத்துணையாலும் நலம் உண்டாகும்.
அவிட்டம் 1,2: ஜீரணம் சம்பந்தப்பட்ட ஆரோக்கியக் குறைபாடு வரக்கூடும்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்துவீர்கள்.
சதயம்: குடும்ப நலம் சீராகும். உங்களின் உழைப்பு வீண்போகாது.
பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் கூட்டாளிகள் நன்கு ஒத்துழைப்பார்கள்.

மீனம்: 
பூரட்டாதி 4: வெளியூர், வெளிநாட்டுத் தொடர்பு மூலம் ஆதாயம் கிடைக்கும்.
உத்திரட்டாதி: உங்களின் மதிப்பு உயரும். இன்று சுபநிகழ்ச்சி நிகழும்
ரேவதி: முயற்சியில் வெற்றி காண்பீர்கள். பண வரவு அதிகரிக்கும்.