இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றாளர்களுக்கு மீண்டும் ஏற்படும் பாதிப்பு தொடர்பில் எச்சரிக்கை !

#SriLanka #Omicron
Nila
2 years ago
இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றாளர்களுக்கு மீண்டும் ஏற்படும் பாதிப்பு தொடர்பில் எச்சரிக்கை !

இலங்கையில் தற்போது அடையாளம் காணப்படும் அனைத்து கொவிட் தொற்றாளர்களுக்கும் ஒமிக்ரோன் பிறழ்வு உள்ளமை உறுதிப்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் டொக்டர் ரஞ்ஜித் பட்டுவத்துடாவ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஒமிக்ரோன் தொற்றாளர்களுக்கு, கொவிட் தொற்று மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தும் சாத்தியம் உள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

நாட்டில் தற்போது 100 வீதம் ஒமிக்ரோன் பரவி வருவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

ஒமிக்ரோன் தொற்று காரணமாக, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையில் தற்போது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவோரில் பெரும்பாலானோர் முழுமையான தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்கள் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவின் விசேட வைத்தியர் டொக்டர் என்டனி மென்டீஸ் தெரிவிக்கின்றார்.