SL vs AUS - மூன்றாவது போட்டியின் வெற்றியுடன் T20 தொடரை கைப்பற்றியது அவுஸ்திரேலியா

#Srilanka Cricket
Prasu
2 years ago
SL vs AUS - மூன்றாவது போட்டியின் வெற்றியுடன் T20 தொடரை கைப்பற்றியது அவுஸ்திரேலியா

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ரி20 போட்டியில் அவுஸ்திரேலியா அணிக்கு வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 120 ஓவர்களை பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் அணித்தலைவர் தசுன் சானக ஆட்டமிழக்காது 39 ஓட்டங்களையும் தினேஸ் சந்திமால் 25 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் கேன் ரிசர்ட்சன் மூன்று விக்கெட்டுக்களை அதிகபட்சமாக வீழ்த்தினார்.

121 என்ற வெற்றி இலக்கை பதிலுக்கு துடுப்பெடுத்தாடி அவுஸ்திரேலியா அணி 16.5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை இழந்து 124 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றது.

பந்துவீச்சில் மஹீஷ் தீக்‌ஷன மூன்று விக்கெட்டுக்களை அதிகபட்சமாக வீழ்த்தினார்.

அதனடிப்படையில் 3 - 0 என்ற ரீதியில் அவுஸ்திரேலியா அணி தொடரை கைப்பற்றியுள்ளது.