இந்தியாவிலிருந்து வருகை தந்த ஸ்வர்ண புஷ்ப்: எரிசக்தி அமைச்சரிடம் 40,000 மெற்றிக் தொன் எரிபொருள் கையளிப்பு

Prathees
2 years ago
இந்தியாவிலிருந்து வருகை தந்த ஸ்வர்ண புஷ்ப்: எரிசக்தி அமைச்சரிடம் 40,000 மெற்றிக் தொன் எரிபொருள் கையளிப்பு

இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்திடமிருந்து (IOC) 40,000 மெற்றிக் தொன் எரிபொருள் தொகுதி இன்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் கையளிக்கப்பட்டது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயினால் இந்த எரிபொருள்  கையளிக்கப்பட்டது.

இந்தியாவிலிருந்து வருகை தந்த ‘ஸ்வர்ண புஷ்பா’ என்ற எண்ணெய்க் கப்பல் மூலம் இந்த எரிபொருள் சரக்கு இலங்கைக்கு விநியோகிக்கப்பட்டது.

இந்நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்த கோபால் பாக்லே, இந்தியா இலங்கையின் உறுதியான பங்காளி என்றும் உண்மையான நண்பன் என்றும் ட்வீட் செய்துள்ளார்.

இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பிற்காக இந்தியா-இலங்கை கூட்டு தொடர்ந்தும் செயல்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.