அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் 16.02.2022

Keerthi
2 years ago
அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் 16.02.2022

மேஷம்: 
அசுவினி: குழந்தைகளால் பெருமிதம் உண்டாகும். மகிழ்ச்சி கூடும்.
பரணி: வீண் விவாதம் வேண்டாம். நண்பர்களுக்கு உதவுவீர்கள்.
கார்த்திகை 1: சீரான நாள். பணப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: பணியாளர்களுக்கும், கலைஞர்களுக்கும் நன்மைகள் உண்டு.
ரோகிணி: இனிமையான நாள். நல்ல செய்திகள் வர வாய்ப்புள்ளது.
மிருகசீரிடம் 1,2: நீங்கள் சந்திக்க விரும்பியவர் உங்களைத் தொடர்பு கொள்வார்.

மிதுனம்: 
மிருகசீரிடம் 3,4: தந்தை மூலம் நன்மை உண்டாகும். நட்பு வட்டம் விரியும்.
திருவாதிரை: தரகு, கமிஷன் போன்ற விஷயங்களில் கவனம் தேவை.
புனர்பூசம் 1,2,3: நிம்மதி மீளும். கலைஞர்களுக்கு நல்வாய்ப்பு தேடி வரும்.

கடகம்: 
புனர்பூசம் 4: வேலை மாறுவது பற்றி இப்போது யோசிக்க வேண்டாம்.
பூசம்: வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த செய்தி ஒன்று வரும்
ஆயில்யம்: ஒவ்வாத உணவைத் தவிர்க்கவும். கூடுதலாக உழைக்க வேண்டி வரும்

சிம்மம்: 
மகம்: குடும்பத்தினருடன் விட்டுக் கொடுத்து சென்று நன்மை அடைவீர்கள்.
பூரம்: வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம்.
உத்திரம் 1: பணம் வந்தாலும் சுபச்செலவுகளால் பற்றாக்குறை நீடிக்கும்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: உங்களுடைய சிறு எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள்.
அஸ்தம்: குறைந்த செலவில் முடிக்க வேண்டிய விஷயத்திற்கு அதிக செலவாகலாம்.
சித்திரை 1,2: உங்களது பொருட்கள் உங்கள் பொறுப்பிலேயே இருக்கட்டும்.

துலாம்: 
சித்திரை 3,4: கூடுதலாக உழைத்து நன்மையடையும் நாள். வியாபார வெற்றி உண்டு
சுவாதி: யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். பரபரப்பான நாள்.
விசாகம் 1,2,3: உணவில் கவனமாக இருங்கள். அழகுணர்ச்சி கூடும்.

விருச்சிகம்: 
விசாகம் 4: பிரிந்தவர்கள் சேரும் நாள். உடன்பிறந்தோரின் உதவி கிடைக்கும்.
அனுஷம்: வெளியூர், வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும்.
கேட்டை: பொறுப்புகள் கூடும் நாள். கிடைக்க வேண்டிய பணம் வந்து சேரும்.

தனுசு: 
மூலம்: பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு தாமதப்படும்.
பூராடம்: பணியிடத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள். பொறுமை தேவை.
உத்திராடம் 1: விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் அவசரம் வேண்டாம்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: எதிலும் தாமதம் காரணமாக சற்று வெறுப்படையும் நாள்.
திருவோணம்: தவறு செய்பவர்களைத் தைரியமாகத் தட்டிக் கேட்பீர்கள்.
அவிட்டம் 1,2: கடன் பிரச்னை உங்களது கட்டுப்பாட்டிற்குள் வரும்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: பணியாளர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு அதிகரிக்கும்
சதயம்: நற்செய்தி ஒன்று வரும். நன்மை கிடைக்கும் நாள்.
பூரட்டாதி 1,2,3: திடீர் நன்மை உண்டு. நன்கொடை அளித்து நிறைவு காண்பீர்கள்.

மீனம்: 
பூரட்டாதி 4: வாழ்க்கை முறையில் சில மாறுதல்களைச் செய்வீர்கள்.
உத்திரட்டாதி: குடும்பத்தில் இருந்த சலசலப்பு நீங்கி மகிழ்ச்சி நிலவும்.
ரேவதி: வாழ்க்கைத்துணைக்கு உங்களால் நன்மை ஏற்படும்.