ஊடகவியாலாளர் மீது தாக்குதல்: ஐ.நா வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் கடும் விமர்சனம்

Mayoorikka
2 years ago
ஊடகவியாலாளர் மீது தாக்குதல்: ஐ.நா வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் கடும் விமர்சனம்

விமர்சனக் குரல்களை மௌனமாக்குவது பொது விவாதம், சுதந்திரம் மற்றும் அனைவரின் மனித உரிமைகளையும் குறை மதிப்புக்கு உட்படுத்துகிறது என இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி
ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரம வீட்டின் மீது நேற்று முன்தினம் இடம்பெற்ற தாக்குதலின் பின்னணியில் இவ்வாறான கருத்தை ஹனா சிங்கர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

ஜனநாயகத்தை உறுதி செய்வதில் ஊடகவியலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் காத்திரமான பங்கை
வகிக்கிறார்கள். கருத்து சுதந்திரம், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதி செய்வதற்கு அவர்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது எனவும் இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் குறிப்பிட்டுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!