சுவிட்சர்லாந்தில் ஆயுட் காப்புறுதி முக்கியம் - அதை எவ்வாறு செய்வது...?
Nila
2 years ago
ஆயுட்காப்புறுதி
Lebensversicherung
- 3ஆவது பாதுகாப்புடன் சேமிப்பு.
- சுவிசில் வீடு வாங்க முற்கட்டணத்துக்கு உபயோகமாகும்.
- சுவிசில் வாங்கும் அல்லது வாங்கிய வீட்டின் கடனை கட்டிக் கழிக்க உதவும்.
- உங்களிற்கும், உங்கள் துணைக்கும் ஓய்வூதியத்துக்குப் பிறகு அல்லது சுவிசில் வீடு வாங்க, சுவிசில் சொந்த தொழில் தொடங்க, தொழில் செய்ய முடியாத அளவிற்க்கு சுகயீனம் உற்றால், உதவியாக அமையும் காப்புறுதியே இது.
- நீங்கள் செய்யும் ஒப்பந்தம், ஒப்பந்தம் செய்த கட்டணத்தை பொறுத்தே உங்கள் இழப்பீட்டுத் தொகை மற்றும் ஒப்பந்த சேமிப்புத் தொகை அமையும்.
- இறப்பின்போது உங்கள் ஒப்பந்த தொகை குடும்பத்துக்கு கொடுக்கப்படும்.
- சுகயீனம், விபத்தின்போது ஒப்பந்த அடிப்படையில் நஸ்டஈடு வழங்கப்படும்.
- ஒப்பந்த அடிப்படையில் மாதம் கட்டவேண்டிய கட்டணம் நிறுவனமே பொறுப்பேற்கும்.
- ஒப்பந்த அடிப்படையில், இரண்டு வருடங்களுக்கு மேல் சுகயீனம் அல்லது விபத்தில் வேலை இழக்க நேர்ந்தால், மாதக் கட்டணத்தை கட்டி, சம்பளமாக மாதாமாதம் 500.- தொடக்கம் 1000, 2000 என ஒரு உதவித் தொகையை உங்களுக்கு கொடுக்கப்படும்.
முக்கிய குறிப்பு
காப்புறுதிய இடையில் பணத்தை எடுப்பதானால், ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட தொகை கழிக்கப்படும்.
நீங்கள் செய்த ஒப்பந்தத்திற்கு ஏற்ப, உங்கள் தொகையை இடையில் நிறுத்தி எடுக்கமுடியும்.
காப்புறுதியை 3அ ஒப்பந்தத்தில் செய்தால் மட்டுமே வருமான வரிக்குக் கணக்கிடலாம்.