அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் 17.02.2022

Keerthi
2 years ago
அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் 17.02.2022

மேஷம்: 
அசுவினி: அதிர்ஷ்டம் வரும்போது அதைப் புரிந்துகொண்டு வரவேற்பீர்கள்.
பரணி: தடைகளாய் இருந்த விஷயங்கள் இனி படிகளாய் மாறும்.
கார்த்திகை 1: சலிப்பான தருணங்களை எளிதாக கடந்து செல்வீர்கள்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: முடிவடையாமல் இருந்த விஷயம் இன்று நல்லபடியாக முடியும்.
ரோகிணி: பேச்சில் கவனமாக இருந்து பிரச்னையில் இருந்து தப்புவீர்கள்.
மிருகசீரிடம் 1,2: பெரியோர் நலனில் அக்கறை செலுத்தி அவர்களின் ஆசியை பெறுவீர்கள்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: பெற்றோருக்கு விருப்பமான செயல் ஒன்றை செய்வீர்கள்.
திருவாதிரை: கடன் பிரச்னை தீரும். நட்பு வட்டம் விரிவடையும்.
புனர்பூசம் 1,2,3: உங்கள் மீது அதிகப் பாசம் காட்டுபவரைப் புரிந்து கொள்வீர்கள்.

கடகம்: 
புனர்பூசம் 4: பிறர் நலனுக்காக பாடுபட்டாலும் நற்பெயர் கிடைக்க தாமதமாகும்.
பூசம்: கவனக்குறைவினால் வந்த பிரச்னை தீரும். நிம்மதியான நாள்.
ஆயில்யம்: திடீர் செலவைச் சமாளித்து வெல்வீர்கள். தர்மம் செய்வீர்கள்.

சிம்மம்: 
மகம்: நண்பர் சந்திப்பு உண்டு. மனதில் குதுாகலம் நிறையும் நாள்.
பூரம்: திறமை அதிகரிப்பதால் மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள்.
உத்திரம் 1: இன்று சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். மனக்குழப்பம் அகலும்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: பணிபுரியும் பெண்கள் மகிழ்வார்கள். பகைவர் மனம் மாறுவர்.
அஸ்தம்: வீட்டில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். உடல்நலம் மேம்படும்.
சித்திரை 1,2: இன்று தகுந்த ஓய்வெடுத்து உடல்நலத்தைச் சீராக்கிக் கொள்வீர்கள்.

துலாம்: 
சித்திரை 3,4: பெரியோரின் மனம் மகிழும்படியான செயல்களை செய்வீர்கள்.
சுவாதி: குழந்தைகளின் செயலால் ஏற்பட்ட மனஅழுத்தம் தீரும்.
விசாகம் 1,2,3: பணியிடத்தில் நீண்ட காலம் கழித்து பாராட்டை பெறுவீர்கள்.

விருச்சிகம்: 
விசாகம் 4: கூடுதல் உழைப்பால் குடும்பத்தின் பொருளாதார நிலை உயரும்.
அனுஷம்: வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும். நட்பு வட்டம் விரியும்.
கேட்டை: உங்கள் மனதில் இருக்கும் கனவு இன்று செயல் வடிவம் பெறும்.

தனுசு: 
மூலம்: வீண்பழி வராதவாறு கவனத்துடன் நடந்து கொள்வீர்கள்
பூராடம்: அதிர்ஷ்டம் இப்போதைக்கு இல்லை. நன்றாக உழையுங்கள்.
உத்திராடம் 1: வீண்பழி ஏற்படுத்தும் சூழலுக்குள் செல்ல வேண்டாம்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: அலுவலகத் தகவலை யாரிடமும் சொல்ல வேண்டாம்.
திருவோணம்: பேச்சிலும், செயலிலும் கவனமாக இருக்க வேண்டிய நாள்.
அவிட்டம் 1,2: நீங்கள் எதிர்பார்த்த தகவல்கள் சற்றுத் தாமதமாகவே வரும்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: உங்களது பொறுப்புகளை கவனமாகச் செய்வது நல்லது.
சதயம்: பிறரது விஷயத்தில் தலையிடாமல் இருங்கள். அதுவே உங்களை உயர்த்தும்.
பூரட்டாதி 1,2,3: பெரியோருக்கான மரியாதையைக் குறைக்காதீர்கள்.

மீனம்: 
பூரட்டாதி 4: சற்று அதிகமாகப் பணிந்து போய் ஜெயிக்க வழிபார்ப்பீர்கள்.
உத்திரட்டாதி: பழி தரும் செயல்களைச் செய்யாமல் காத்துக்கொள்வீர்கள்.
ரேவதி: வீடு வாங்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். உழைப்பு கூடும்.