சிட்னி மற்றும் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் புதிய சோதனை-மனிதர்களுக்கு “பயோனிக் கண்கள்”

Keerthi
2 years ago
சிட்னி  மற்றும் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் புதிய சோதனை-மனிதர்களுக்கு “பயோனிக் கண்கள்”

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு சமீபத்தில் செம்மறி ஆடுகளுக்கு பயோனிக் கண்களைப் பயன்படுத்தி "கூர்மையான கண்பார்வை" அளித்தது, அவை ஆடுகளின் விழித்திரைக்குப் பின்னால் பொருத்தப்பட்டன.

இதன் முடிவுகள் மிகவும் வெற்றிகரமாக வந்ததால், சிட்னி மற்றும் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மனிதர்கள் மீது சோதனைகளை விரைவில் தொடங்க ஆவணங்களை தாக்கல் செய்ததாக தெரிவித்தனர்.

அதிகாரப்பூர்வமாக "பீனிக்ஸ் 99" என்று அழைக்கப்படும் இந்த சாதனம் ஒரு ஜோடி சன்கிளாஸில் இணைக்கப்பட்ட ஒரு சிறிய கேமராவிலிருந்து கேமரா ஊட்டத்தை நேரடியாக விழித்திரைகளுக்கு மின்சார சமிக்ஞைகளின் வடிவத்தில் கம்பியில்லாமல் அனுப்புகிறது, ஆப்டிகல் நரம்பு மூலம் செயலாக்கப்பட்டவுடன், இந்த சமிக்ஞைகள் மூளைக்கு அனுப்பப்படும்.

ஆரம்ப நிலையில் உள்ள இந்த தொழில்நுட்பமானது மிகவும் விலை உயர்ந்தது சிலவற்றின் விலை ரூ. 7 லட்சம் வரை இருக்கலாம்,  ஆனால் அடுத்த பத்தாண்டுகளில் இந்த தொழில்நுட்பம் பெரும் முன்னேற்றம் அடையும் மற்றும் உலகெங்கிலும் உள்ள பல லட்ச கணக்கான மக்கள் இதனால் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2019 ஆம் ஆண்டின் அறிக்கையின்படி, உலகில் பார்வையற்றவர்களில் 20 சதவீதம் பேர் இந்தியாவில் உள்ளனர். சுமார் 300 கோடிக்கு அதிகமான மக்கள் பார்வையற்றவர்கள் அல்லது பார்வை குறைபாடு கொண்டுள்ளனர். உலக சுகாதார அமைப்பு உலகெங்கிலும், குறைந்தது 10000 கோடி மக்கள் பார்வைக் குறைபாடுகளால் பாதிக்கப்படுகின்றனர் என கூறியுள்ளது.