விற்றமின்கள் நிறைந்த, ஆரோக்கியம் தரும் பிரைடு வெஜிடபிள் சமைத்துப்பாருங்கள்.
#Cooking
#Vegetable
#Fry
Mugunthan Mugunthan
2 years ago
தேவையான பொருட்கள்
- காரட் – கால் கப்
- பேபி கார்ன் – கால் கப்
- கோஸ் – கால் கப்
- காலிஃபிளவர் – கால் கப்
- சோல மாவு – நான்கு டீஸ்பூன்
- மைதா மாவு – இரண்டு டீஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது – அரை டீஸ்பூன்
- உப்பு – தேவைகேற்ப
- சோயா சாஸ் – அரை டீஸ்பூன்
- எண்ணெய் – தேவைகேற்ப
க்ரேவி செய்ய :
- எண்ணெய் – தேவைகேற்ப
- பூண்டு பல் – ஐந்து (நறுக்கியது)
- பச்சை மிளகாய் – ஒன்று (நறுக்கியது)
- வெங்காயம் – ஒன்று (நறுக்கியது)
- சில்லி பேஸ்ட் – ஒரு டீஸ்பூன்
- தக்காளி சாஸ் – அரை டீஸ்பூன்
- உப்பு – தேவைகேற்ப
- இஞ்சி பூண்டு விழுது – கால் டீஸ்பூன்
- சோயா சாஸ் – கால் டீஸ்பூன்
- கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் காரட், காலிஃபிளவர், கோஸ், பேபி கார்ன், சோல மாவு, மைதா மாவு, உப்பு, இஞ்சி, பூண்ட விழுது, சோயா சாஸ் சிறிதளவு தண்ணிர் ஊற்றி
- நன்றாக பிசைந்து கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பக்கோடா போல் போட்டு பொன்னிறமானதுடன் பொரித்து எடுத்து வைத்து கொள்ளவும்.
- இன்னொரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய பொண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், சில்லி பேஸ்ட், தக்காளி சாஸ், உப்பு, இஞ்சி,
- பூண்டு விழுது, சோயா சாஸ் சேர்த்து நன்றாக வதக்கி சிறிது தண்ணிர் ஊற்றி கொதிக்க விட்டு பிறகு வறுத்த காய்கறிகளை அதில் போட்டு நன்றாக கிளறி கொத்தமல்லி துவி இறக்கவும்.