பீர் குடிப்பதால் கொரோனா பாதிக்க அதிக வாய்ப்பு..ஆய்வில் தகவல்

Keerthi
2 years ago
பீர் குடிப்பதால் கொரோனா பாதிக்க அதிக வாய்ப்பு..ஆய்வில் தகவல்

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது வரை பல்வேறு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

இந்த நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் குரவையும் மதுவையும் வைத்து ஆஸ்திரேலியாவை சேர்ந்த இதழ் ஆய்வு கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. வாரத்துக்கு 1 4 கோப்பை சிவப்பு ஒயின் அருந்துவது கொரோனா தொற்று ஏற்படும் அபாயத்தை 10% அளவுக்கும், 5 அல்லது அதற்கு மேற்பட்ட கோப்பைகள் ஒயினை அருந்துவதால் 17% அளவுக்கும் மனிதனுக்கு கொரோனா நோய்த்தொற்று குறைகிறதாம்.

அதேபோல் வெள்ளை ஒயின், சாம்பைனைவிட சிவப்பு ஒயின் நல்ல பலனை தருவதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் பீர் அருந்துவது கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட 700 சதவீதம் அளவுக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்த ஆய்வு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

ஆனால், இது முதல் கட்ட ஆய்வு முடிவின் மூலம் தெரியவந்துள்ளதாகவும், உறுதியானது இல்லை என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆய்வு முடிவு எப்படி இருந்தாலும் வழக்கம்போல் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது அவசியம். அதைவிட தடுப்பு ஊசி செலுத்தி கொள்வது ஆகிய வழிமுறைகள் தான் கொரோனாவில் இருந்து மனிதனை காப்பாற்றும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.