கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த அதி கூடிய எடை கொண்ட ஸ்ட்ராபெரி.

Keerthi
2 years ago
கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த அதி கூடிய எடை கொண்ட ஸ்ட்ராபெரி.

அதி கூடிய எடை கொண்ட " ஸ்ட்ராபெரி"(Strawberry ) பழம் என்ற , கின்னஸ் சாதனையை மத்திய இஸ்ரேல் நாட்டின் விவசாயி பெற்றுக் கொண்டார். 
ஆனால், அந்த பழத்தின் சாதனை , முன்னைய சாதனையை முறியடித்தது என்பதை நிரூபிக்க ஒரு வருடம் அந்த விவசாயி காத்திருக்க வேண்டி இருந்தது 
சென்ற வருடம் 2021 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது விளை நிலத்தில் விளைந்த " ஸ்ட்ராபெரி" பழம் ஒன்றின் உருவ அளவை பார்த்ததும் வியந்த அவர், அதை நிறுத்து பார்த்ததில் அது 289 கிராமாக இருந்ததை உலக கின்னஸ் அமைப்பினருக்கு தெரிவித்தார். 

அவர்கள் உறுதி செய்வதற்கு  1 வருடம் எடுத்தது. அதுவரை அந்த பழத்தை குளிர் சாதன பெட்டியில் (Frozen) உறை நிலையில் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இப்போது இந்த மாதம் சரியாக ஒரு வருடத்தின் பின் , ஜப்பானில் 2015  ம் ஆண்டு விளைந்த 250 கிராம் எடையுள்ள ஸ்ட்ராபெரி பழம், சாதனை வரிசையில் இருந்ததை உறுதி செய்த பின், இவருக்கு  முறியடித்த சாதனை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருபுறம் வெற்றியை குதூகலமாக கொண்டாடும் அவர் மறுபுறம் ஒரு கவலையையும் தெரிவித்தார், அதாவது, " ஒரு வருடமாக அவ‌ரது ஸ்ட்ராபெரி பழம், குளிர் நிலையில் இருந்ததால் அதன் ஆரம்ப அழகு குறைந்து சுருங்கி விட்டது..." என்பதால்.