அரசியல்வாதிகள், பிரபலங்கள் எப்படி வழக்குகளிலிருந்து விடுதலையாகிறார்கள்..? அம்பலப்படுத்திய லக்ஸ்மன் கிரியல்ல

Mayoorikka
2 years ago
அரசியல்வாதிகள், பிரபலங்கள் எப்படி வழக்குகளிலிருந்து விடுதலையாகிறார்கள்..?  அம்பலப்படுத்திய லக்ஸ்மன் கிரியல்ல

அரசியல்வாதிகள், முக்கிய பிரபலங்கள் அவர்களுக்கு எதிரான வழக்குகளிலிருந்து விடுதலையாவது நீதிபதிகளின் தவறினால் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

வழக்கு குறித்த குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் பொலிஸார், சட்ட மா அதிபர் திணைக்களம் மற்றும் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு திணைக்களம் என்பனவற்றின் அதிகாரிகளின் மெத்தனப் போக்கே இதற்கு காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முறைப்பாடு குறித்த தகவல்களை உரிய முறையில் மேற்கொள்ளாமையினால் அநேகமான பிரபலங்கள் வழக்குகளிலிருந்து விடுதலையாகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குற்றமற்றவர்கள் என தீர்ப்பளிக்கப்படும் சந்தர்ப்பங்களில் நீதிபதிகளை விமர்சனம் செய்வதில் பயனில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

வழக்கு விசாரணைகளின் போது சரியான சாட்சியங்களையும் விசாரணை அறிக்கைகளையும் வலுவான அடிப்படையில் வழங்காத அரசாங்க நிறுவனங்களின் அதிகாரிகளே பிரபலங்களுக்கு எதிரான வழக்குகளிலிருந்து அவர்கள் விடுதலையாக காரணம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக வழக்கு விசாரணைகளுக்கு மிகவும் பலவீனமான ஆவணங்களை அதிகாரிகள் சமர்ப்பிப்பதனால் முக்கிய பிரபலங்கள் இலகுவில் தப்பித்துக்கொள்கின்றனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.