நாட்டின் நிலைமை மிகவும் பரிதாபகரமானது: வவுனியாவில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

Prathees
2 years ago
நாட்டின் நிலைமை மிகவும் பரிதாபகரமானது: வவுனியாவில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி மாவட்ட மாநாடு (19) வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

முன்னாள் ஜனாதிபதி வவுனியாவிலுள்ள முதலாவது ஸ்ரீ போதி தக்ஷிணாராம விகாரைக்கு விஜயம் செய்த பின்னர்இ வடக்கு மற்றும் கிழக்கு மாகாண பீடாதிபதி வண. சியம்பலகஸ்வெவ விமலசார தேரரை சந்தித்தார். 

அதன்பின்னர், வவுனியா கந்தசாமி கோவிலுக்குச் சென்று இந்து சமய வழிபாடுகளை மேற்கொண்டதுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி மாவட்ட மாநாட்டிலும் கலந்துகொண்டார்.

வவுனியா ஸ்ரீ போதி தக்ஷிணாராமயவில் உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,

தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு சுமார் 15 மாவட்டங்களில் நடத்தப்பட்டுள்ளது. இன்று வவுனியாவிலும்இ எதிர்காலத்தில் யாழ்ப்பாணத்திலும் நடைபெறவுள்ளது.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சி என்ற வகையில் அரசாங்கத்தின் அனைத்து நல்ல விடயங்களுக்கும் ஆதரவளிப்பதுடன் அரசாங்கத்தின் குறைபாடுகளை வெளிப்படையாகப் பேசுகின்றோம்.

எமது கட்சியை இயன்றவரை பலப்படுத்தி அடுத்த தேர்தலுக்கு தயார் செய்வோம் ஒழுக்கமான கட்சி என்ற வகையில் எமது கட்சி நாட்டில் பிரச்சினைகளை ஏற்படுத்தாது.

அகில இலங்கை குழுவை கொழும்பில் கூட்டி 15 தீர்மானங்களை நிறைவேற்றி நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வாக அரசிடம் சமர்ப்பித்துள்ளோம்.

நாட்டின் நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது. விவசாயப் பிரச்சினை வடக்கைப் பாதிக்கிறதுஇ ஏனென்றால் வடக்கை அரிசி கிண்ணம் என்று அழைக்கிறோம், அதனால்தான் விவசாயப் பிரச்சினை இந்த பகுதியை பெரிதும் பாதித்துள்ளது. 

குறிப்பாக மக்கள் மற்றும் நாட்டின் நலனுக்காக ஒரு கட்சி என்ற வகையில் நாங்கள் தொடர்ந்து பலப்படுத்தி தீர்வுகளை தேடுவோம் என்பதை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன் எனத் தெரிவித்தார்.