வெள்ளை எலிகளுக்கு நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!

Keerthi
2 years ago
வெள்ளை எலிகளுக்கு நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!

டெல்டா வைரசை விட பிஏ 2 வகை ஓமிக்ரான் தொற்று மிகவும் வீரியமானது என்று வெள்ளை எலிகளுக்கு நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் ஜப்பானிய அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளார்கள்.

சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதனை தடுக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளார்கள். ஆனால் கொரோனா வைரஸ் உருமாறி அனைத்து நாடுகளுக்கும் பரவுவதால் பொது மக்கள் பெரும் அச்சத்திலுள்ளார்கள். இந்நிலையில் ஜப்பான் ஆய்வாளர்கள் வெள்ளை எலிகளுக்கு நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் பகிரங்க தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.

அதாவது டெல்டா வைரசை விட பிஏ 2 வகை ஓமிக்ரான் வைரஸ் மிகவும் வீரியமானது என்று தெரிவித்துள்ளார்கள். மேலும் பிஏ 2 ஓமிக்ரான் வகை வைரஸ் நுரையீரலை அதிகம் பாதிக்கும் தன்மை கொண்டது என்றும், தடுப்பூசி எதிர்ப்பு சக்தியையும் மீறி இத்தொற்று உடலை தாக்கக்கூடியது எனவும் தெரிவித்துள்ளார்கள். மேலும் இனி வரும் காலத்தில் பிஏ 2 வகை ஓமிக்ரான் வைரசால் உலக மக்கள் பெருமளவில் பாதிப்பை சந்திப்பதற்கு வாய்ப்புள்ளதாகவும் ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளார்கள்.