இன்றைய வேத வசனம் 21.02.2022: நீ போ; நான் உன் வாயோடே இருந்து, நீ பேசவேண்டியதை உனக்குப் போதிப்பேன்.

Prathees
2 years ago
இன்றைய வேத வசனம் 21.02.2022: நீ போ; நான் உன் வாயோடே இருந்து, நீ பேசவேண்டியதை உனக்குப் போதிப்பேன்.

நீ போ; நான் உன் வாயோடே இருந்து, நீ பேசவேண்டியதை உனக்குப் போதிப்பேன்.  யாத்திராகமம் 4:2

ஜென் பிறக்கும் போதே கால்கள் இல்லாமல் பிறந்ததால் மருத்துவமனையிலேயே கைவிடப்பட்டாள். ஆயினும், தான் தத்தெடுக்கப்பட்டது ஒரு ஆசீர்வாதம் என்றும், “எனக்குள் அன்பை பொழிந்த மக்களால் தான் நான் இங்கே இருக்கிறேன்” என்றும் கூறுகிறாள். ‘தான் ஒரு காரணத்திற்காகத்தான் இவ்வாறு பிறந்திருக்கிறோம்’ என்பதை அவள் புரிந்துகொள்ள அவளை தத்தெடுத்த குடும்பத்தினர் உதவினர். அவர்கள், அவளை ‘ஒருபோதும் முடியாது’ என்று சொல்லாதவளாகமும் தன்னுடைய விருப்பங்களையும் பின்தொடரவும் அவளை வளர்த்தி, உற்சாகப்படுத்தினர். அவள் அந்தரத்தில் சாகசம் செய்யும் சாதனையாளராகவும், தேர்ச்சி பெற்ற உடற்பயிற்சியாளராகவும் மாறினாள். ‘நான் எப்படி இதை சமாளிப்பேன்?’ என்கிற மனோபாவத்துடன் தனக்கு முன் இருக்கும் சவால்களை தான் சந்திப்பதாக சொல்லுகிற அவள்; மற்றவர்களும் அதையே பின்பற்ற அவர்களை உற்சாகப்படுத்துகிறாள்.

தங்கள் அழைப்பிற்கு இயலாதவர்காக, பொருந்தாதவர்களாக தங்களை கருதிய அநேகரை தேவன் பயன்படுத்திய சம்பவங்களை வேதம் கூறுகிறது. தேவன் அவர்களை எப்படியாயினும் பயன்படுத்தினார். ஒரு தரமான உதாரணம்தான் மோசே. இஸ்ரவேலர்களை தலைமைதாங்கி எகிப்திலிருந்து வெளியே கொண்டுவர தேவன் அவரை அழைத்தபோது, மோசே தடைசொன்னார் (யாத்திராகமம் 3:11; 4:1) மேலும், “நான் திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன்” என்று எதிர்ப்பு தெரிவித்தார். ஆனாலும் தேவன், “மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்? ஊமையனையும் செவிடனையும்…உண்டாக்கினவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவா?ஆதலால், நீ போ; நான் உன் வாயோடே இருந்து, நீ பேசவேண்டியதை உனக்குப் போதிப்பேன்” என்றார்.(4:10–12). மோசே மேலும் எதிர்ப்பு தெரிவித்தபோது, அவர் சார்பில் பேசும்படி ஆரோனை அளித்து தாம் இருவருக்கும் உதவுவதாக தேவன் வாக்களித்தார் (வ.13–15).

ஜென்னை போல, மோசேயை போல நாம் அனைவருமே உலகத்தில் ஒரு காரணத்துக்காக பிறந்திருக்கிறோம் மேலும் தேவனும் நமக்கு கிருபையாக அனைத்திலும் உதவுகிறார். அவர் நமக்கு ஏற்ற நபர்களை தருகிறார் மேலும் அவருக்காக நாம் வாழ நமக்கு தேவையான அனைத்தையும் தருகிறார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!