எரிபொருள் வாங்க ரூ.1036 கோடி கொடுக்க முடியாது என கைவிரித்த அரச வங்கிகள்: நெருக்கடியில் பெற்றோலிய கூட்டுத்தாபனம்

Prathees
2 years ago
எரிபொருள்  வாங்க ரூ.1036 கோடி கொடுக்க முடியாது என கைவிரித்த அரச வங்கிகள்: நெருக்கடியில்  பெற்றோலிய கூட்டுத்தாபனம்

பெற்றோலிய கூட்டுத்தாபனம் 75 பில்லியன் ரூபா கடன் நிறுவனமாக மாறியுள்ள நிலையில்,  ஒரு சதம் கூட வழங்க முடியாது என வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், பெற்றோலிய கூட்டுத்தாபனம்  நெருக்கடியான கட்டத்தில் விழுந்துள்ளது.

இரண்டு அரச வங்கிகளிடமும் பெறப்பட்ட கடன் தொகை 370,000 மில்லியன் ரூபாவை தாண்டியுள்ளது

சமீபகாலமாக எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கு டொலரில் செலுத்த வேண்டிய ரூபாயின் அளவைக் கண்டறிய இரண்டு அரச வங்கிகளிடமும் 1036 மில்லியன் ரூபா கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும்இ அதுவும் நிராகரிக்கப்பட்டது.

தற்போது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஏற்பட்டுள்ள மொத்த நட்டம் 11 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமாகும்

இது தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்கவிடம் கருத்து தெரிவிக்கையில், 

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளும் மத்திய வங்கி அதிகாரிகளுமே இந்த நிதி நெருக்கடிக்கு காரணம்.ஜனாதிபதிஇ பிரதமர்இ விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர்கள்இ தவிசாளர்கள் வேறு வேறு என்றாலும் இந்த விவகாரங்களை நிர்வகித்தவர்கள் வேறு.

இந்த இரண்டு நிறுவனங்களின் அரசு அதிகாரிகளின் நடவடிக்கைகளில் பலஆன  இப்போது கிடைத்திருப்பதாகவும் அவர் கூறுகிறார்.