ஒமிக்ரோன் பரவல் அச்சுறுத்தலாக இல்லை - சுகாதார அதிகாரிகள்

Mayoorikka
2 years ago
ஒமிக்ரோன் பரவல் அச்சுறுத்தலாக இல்லை - சுகாதார அதிகாரிகள்

கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸைப் பெறுவதில் மக்கள் பெரும் ஆர்வத்தைக் காட்டத் தொடங்கியுள்ளதாகவும் கொவிட் அல்லது ஒமிக்ரோன் பரவல் நிலைமை தற்போது அச்சுறுத்தலாக இல்லை எனவும்  சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும் அதிகமான மக்கள் சரியான நேரத்தில் பூஸ்டர் டோஸைப் பெற தவறினால் நிலைமை மாற்றம் அடையலாம், எனவே இதனை சதாரனமாக எடுத்துக்கொள்ள வேண்டம் என கொவிட்-19 கட்டுப்படுத்தல் தொடர்பான இராஜாங்க அமைச்சின் இணைப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.

கடந்த ஒன்பது நாட்களில் பூஸ்டரைப் பெறுபவர்களில் எண்ணிக்கையில் 16% அதிகரிப்பை சுகாதார அமைச்சு அவதானித்துள்ளது.

அதன்படி, இரண்டாவது டோஸ் பெற்றவர்களில் 46 சதவீதம் பேர் இதுவரை பூஸ்டர் டோஸைப் பெற்றுள்ளனர் என்று அன்வர் ஹம்தானி கூறினார்.

இதனால், அடுத்த இரண்டு வாரங்களில் இலங்கையில் 70%  மானவர்கள் பூஸ்டர் டோஸைப்  பெற்றுக்கொள்ள முடியும் என்று விசேட வைத்திய நிபுணர் அன்வர் ஹம்தானி நம்பிக்கை வெளியிட்டார்.

இவ்வாறு தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை அனைவரும் பெறும் பட்சத்தில்  கொவிட் தொற்றுக்கு எதிரான சுகாதார கட்டுப்பாடுகளை நிபுணர்களின் பரிந்துரைகளுக்கு அமைய படிப்படியாக தளர்த்த முடியும் என்று அவர் வலியுறுத்தினார்.