சுற்றிவளைத்த பொதுமக்கள்-கோபத்தின் உச்சத்தை வெளிப்படுத்திய ஜனாதிபதி!

#Sri Lanka President
Nila
2 years ago
சுற்றிவளைத்த பொதுமக்கள்-கோபத்தின் உச்சத்தை வெளிப்படுத்திய ஜனாதிபதி!

ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷவை ஆத்திரத்துடன் சுற்றிவளைத்து பொது மக்கள் கேள்வி எழுப்பிய சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர்கள் சிலரை இன்றைய தினம் சந்திப்பதற்காக ஜனாதிபதி சென்றிருந்தார். இதன் போது ஜனாதிபதி பொது மக்களிடம் தங்கள் நிலைமை தொடர்பில் பேசியுள்ளாார். எனினும் கோபமடைந்த மக்கள் ஜனாதிபதியிடம் எதிர்த்து கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.

தினசரி 500 கிலோ கிராம் கொழுந்து பறித்த நாங்கள் தற்போது 200 கிலோ கிராம் மாத்திரமே பறிக்கின்றோம் என மக்கள் ஜனாதிபதியிடம் குறிப்பிட்டுள்ளனர்.

கொஞ்சம் இருங்கள்... நான் சொல்வதனை கேளுங்கள்.. எவ்வளவு காலம் இலவசமாக உரம் வழங்கப்பட்டது? என்னிடம் தகவல் கூறுங்கள் என ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

இலவசமாக கொடுத்தவைகள் இருக்கட்டும். நியாயமான விலையில் தற்போது எங்களுக்கு உரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கூறியுள்ளனர்.

பொய் கூறாதீர்கள் இரண்டு வருடங்கள் உரத்தை இலவசமாக வழங்கியிருக்கின்றோம். அப்படி என்றால் எவ்வாறு கொழுந்து வளர்ச்சி குறைவடையும். பொய்யான தகவல்களை கூற வேண்டாம் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த மக்கள் நாங்கள் பொய் கூற வில்லை. இரண்டு பங்கு கொழுந்தில் ஒரு பங்கு குறைவடைந்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.