போர் கப்பலிலிருந்து லேசர் தாக்குதல்.. குற்றம் சாட்டும் பிரபல நாடு..!!!

Keerthi
2 years ago
போர் கப்பலிலிருந்து லேசர் தாக்குதல்.. குற்றம் சாட்டும் பிரபல நாடு..!!!

கடற்பகுதியை கண்காணிக்கும் விமானத்தை சீனா போர் கப்பலிலிருந்து லேசர் தாக்குதல் நடத்தயுள்ள சம்பவம் பரபரப்பை எற்படுத்தயுள்ளது.

ஆஸ்திரேலியா நாட்டில் இருக்கும் சிறப்பு பொருளாதார மண்டல கடற்பகுதியை கண்காணிப்பு விமானம் கண்காணித்துக் கொண்டு இருந்துள்ளது. அப்போது சீனா போர் கப்பலிலிருந்து அந்த விமானத்தை நோக்கி லேசர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த தாக்குதல் குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறுகையில் "இந்த தாக்குதல் ஒரு தீவிரமான பாதுகாப்பு பிரச்சினை என்றும் அபாயகரமானது. மேலும் தொழில் முறையிலான கடற்படைக்கு இது பொருத்தமற்றது. அவர்கள் ஏன் இதை செய்தார்கள் என கேட்க விரும்புகிறோம். இது தொடர்பாக முழுமையான விசாரணை தேவை" என்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் வாங் வின்பின் செய்தியாளர்களிடம் கூறுகையில் "ஆஸ்திரேலியா தெரிவித்த தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை எனறும் நாங்கள் இது சம்பந்தப்பட்ட துறைகளிடம் விசாரித்த போது தெரியவந்துள்ளது. மேலும் சர்வதேச சட்டங்கள் நடைமுறைகளுக்கு இணங்கி சீன கப்பல் சென்று கொண்டிருந்தது. இதுபோன்ற சீனா தொடர்பான பொய்யான தகவல்களை பரப்புவதை ஆஸ்திரேலியா நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்றுள்ளார்.