இன்றைய வேத வசனம் 23.02.2022: மனுஷனை நீர் நினைக்கிறதற்கும்இ மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்
மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன். சங்கீதம் 8:4
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலே, இத்தாலிய கவிஞர் எப்.டி. மறிநேட்டி வருங்காலவியல் என்ற கலை இயக்கத்தை ஆரம்பித்தார். அவ்வியக்கம் கடந்த காலத்தை புறக்கணித்து, அழகை குறித்ததான பாரம்பரிய கருத்துக்களை ஏளனம் செய்தது, மாறாக இயந்திரங்களை அது உயர்வாக கருதியது.
1909ஆம் ஆண்டு மறிநேட்டி, வருங்காலவியலின் கொள்கை விளக்கத்தை எழுதினார், அதில் அவர்: பெண்களை குறித்து இழிவாகவும், வன்முறையை உயர்வாகவும் அறிவித்திருந்தார். மேலும், “நாம் யுத்தங்களை மேன்மைப்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தி இருந்தார்.
அவருடைய கொள்கை விளக்க உரை இவ்வாறு நிறைவடைந்தது: “உலகத்தின் உச்சியில் நின்று கொண்டு நாங்கள் மீண்டுமாக நட்சத்திரங்களுக்கு விரோதமான கொடூரமான யுத்தத்தை துவங்குகிறோம்”
மறிநேட்டி கொள்கை விளக்கத்தை அறிவித்து, ஐந்து ஆண்டுகளில் நவீன போர் மிகவும் தீவிரமாக ஆரம்பமானது. முதலாம் உலகப் போர் யாருக்கும் எந்த புகழையும் கொண்டு வரவில்லை. மறிநேட்டியே 1944-ல் மரித்தார். ஆனால் இவைகளை எல்லாம் கண்டுகொள்ளாமல், நட்சத்திரங்கள் அதினதின் இடத்திலே நிலைத்திருந்தன.
தாவீது ராஜா, இந்த நட்சத்திரங்களை குறைத்து கவித்துவமாக பாடியிருந்தார் ஆனால் வியப்பூட்டும் வகையில் வித்தியாசமான கண்ணோட்டத்தோடு. அவர் எழுதுகிறார்,”உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது,
மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்.”(சங்கீதம்) என்று. தாவீதின் இந்தக் கேள்வி அவிசுவாசத்தினால் வந்தது அல்ல ஆனால் வியப்பினால் தன்னை தாழ்த்தினார்.
இந்த அகண்ட அண்ட சராசரங்களை உண்டாக்கின தேவன், மெய்யாகவே நம் மீது சிந்தையாய் இருக்கிறார் என்பதை அவர் அறிந்திருந்தார். அவர் நம்முடைய ஒவ்வொரு விபரத்தையும் கவனிக்கிறார், நம்முடைய நன்மை, தீமை, தாழ்மை, கொடூரம், ஏன் அபத்தத்தை கூட கவனிக்கிறார்.
நட்சத்திரங்களுக்கு சவால் விடுவது என்பது முட்டாள்தனமானது, மாறாக அவைகள் நம்முடைய சிருஷ்டிகரை துதிக்கும்படி நமக்கு சவால் விடுகின்றன