400 கிலோகிராம் கேரள கஞ்சா பொதிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

Prathees
2 years ago
400 கிலோகிராம் கேரள கஞ்சா பொதிகளுடன் சந்தேகநபர்  ஒருவர் கைது

ஹெந்தல தொடுபாலவத்தை, களனி முகத்துவாரப் பகுதியில் சுமார் 400 கிலோகிராம் கேரள கஞ்சா பொதியுடன் சந்தேகநபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

இன்று (23) மாலை இலங்கை கடற்படையினரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

அங்கு மீன்பிடிக் கப்பலொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சா பதுக்கினை சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக கரைக்குக் கொண்டுவர முற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

10 பைகளில் 185 பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த கஞ்சாவின் பெறுமதி சுமார் 120 மில்லியன் ரூபாவாகும்.

கேரள கஞ்சா கையிருப்புடன் மீன்பிடி படகு ஒன்றும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் ஒருவரும், மோசடியில் ஈடுபட்ட மற்றுமொரு டிங்கி படகு ஒன்றும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் ஹெந்தல பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடையவர்.

சந்தேகநபரும் இரண்டு படகுகளும், கேரள கஞ்சாவும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.