அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் 24.02.2022

Keerthi
1 year ago
அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் 24.02.2022

மேஷம்:

அசுவினி: பேச்சில் கவனம் தேவை. வீட்டில் சிறு மாற்றம் செய்வீர்கள்.
பரணி: பிறரிடம் பேசும் போது சொற்களை கவனமாக கையாளவும்.
கார்த்திகை 1: பிடிவாதப் போக்கை மாற்றிக் கொண்டு பலன் அடைவீர்கள்.

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: உங்களால் பயன் அடைந்தவர்கள் நன்றி பாராட்டுவர்.
ரோகிணி: குழந்தைகளால் ஏற்பட்ட சங்கடம் தீரும். வியாபாரம் சூடு பிடிக்கும்.
மிருகசீரிடம் 1,2: வேலைச்சுமை அதிகரிக்கும். சிறிய லாபம் வரும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: முன்பு பகைத்துக் கொண்டவர்கள் உதவ முன் வருவார்கள்.
திருவாதிரை: பணியில் வளர்ச்சி காண்பீர்கள். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
புனர்பூசம் 1,2,3: தந்தையின் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்.

கடகம்:

புனர்பூசம் 4: வருமானம் ஓரளவுக்குத் திருப்திகரமாக இருக்கும்.
பூசம்: முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ஆயில்யம்: கூடுதலாக உழைத்தால் உயர்ந்த நிலையை அடையலாம்.

சிம்மம்:

மகம்: முன்பு இழந்த நன்மை ஒன்று மீண்டும் கிடைக்கும்.
பூரம்: பெரியோரை அனுசரித்து சென்று அவர்களது ஆசியை பெறுவீர்கள்.
உத்திரம் 1: நீண்ட கால கனவு ஒன்று நிறைவேறும். மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: மனதில் தன்னம்பிக்கை கூடும். புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
அஸ்தம்: பேச்சிலும், செயலிலும் கவனமாக இருக்க வேண்டிய நாள்.
சித்திரை 1,2: சோர்வடைய வேண்டாம். முயற்சியைக் கூட்டுங்கள்.

துலாம்:

சித்திரை 3,4: முயற்சியில் இருந்த தாமதம் நீங்கும். நட்பு வட்டம் விரியும்.
சுவாதி: உறவினரிடம் மனக்கசப்பு வராமல் கவனமாக இருங்கள்.
விசாகம் 1,2,3: நேற்று எடுத்த முடிவை இன்று தலைகீழாய் மாற்றுவீர்கள்.

விருச்சிகம்:

விசாகம் 4: கடன் விவகாரங்களை ஒழுங்கு செய்து நிம்மதி பெறுவீர்கள்.
அனுஷம்: நல்ல செய்தி வரும். இன்று முக்கிய முடிவு எடுப்பீர்கள்.
கேட்டை: இன்று ஏற்படும் பிரச்னைகளை எளிதாக சமாளிப்பீர்கள்.

தனுசு:

மூலம்: மாணவர்களுக்கு உதவி செய்து மகிழ்ச்சி அடைவீர்கள்.
பூராடம்: நண்பர்களின் செயல்களால் பெருமிதம் கொள்வீர்கள்.
உத்திராடம் 1: பணியாளர்கள் நன்மை காண்பர். பொறுமை தேவை.

மகரம்:

உத்திராடம் 2,3,4: அரசாங்க வகையில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும்.
திருவோணம்: சகபணியாளர்களிடம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டாம்.
அவிட்டம் 1,2: குடும்ப வருமானம் உயரும். விரும்பிய நன்மை கிடைக்கும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: மேலதிகாரிகளின் ஆணை உங்களுக்கு நன்மையாக முடியும்.
சதயம்: வாழ்க்கைத்துணைக்கு நல்ல செய்தி வரும். மகிழ்ச்சி கூடும்.
பூரட்டாதி 1,2,3: கூடுதல் நன்மை கிடைக்கும். பணியாளர்களுக்கு வேலைப்பளு கூடும்.

மீனம்:

பூரட்டாதி 4: நெருங்கிய நண்பர்களால் சந்தோஷமான செலவுகள் உண்டு.
உத்திரட்டாதி: பிறர் மீதுள்ள சந்தேகங்கள் அகலும். நிம்மதி அதிகரிக்கும்.
ரேவதி: யார் மீதும் வழக்கு தொடுக்க வேண்டாம். வருமானம் உயர ஆரம்பிக்கும்.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு