யாழ்ப்பாணத்தில் அமெரிக்க சுற்றுலாப் பயணியின் பொருட்களைத் திருடியது யார்? - பொலிஸில் முறைப்பாடு

Prathees
2 years ago
யாழ்ப்பாணத்தில் அமெரிக்க சுற்றுலாப் பயணியின் பொருட்களைத் திருடியது யார்? - பொலிஸில்  முறைப்பாடு

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி படகில் பயணித்த அமெரிக்க பிரஜை ஒருவர்இ படகின் அனைத்து உபகரணங்களும் திருடப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸில் கடந்த 23ஆம் திகதி முறைப்பாடு செய்துள்ளார். 

குறித்த அமெரிக்க பிரஜை கடந்த 22ஆம் திகதி கொழும்பில் இருந்து விசேட படகில் யாழ்ப்பாணம் குருநகர் ஜெட்டிக்கு வந்து படகை அங்கு நிறுத்தி வைத்து, திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு சென்று தனது பயணப் பொதிகளை அங்கேயே வைத்துவிட்டு மீண்டும் படகு நிறுத்திவைக்கப்பட்ட இடத்திற்குச் சென்றுள்ளார்.

​​அங்கு அவர் வைத்திருந்த அனைத்து உபகரணங்களும் காணாமல் போனது தெரியவந்துள்ளது.

இந்த ப குறித்து அமெரிக்க பிரஜை  பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளார்.

காணாமல் போன பொருட்களில் மதிப்புமிக்க டைவிங் கண்காணிப்பு கருவிகள், டைவிங் கருவிகள், பாதுகாப்பு ஜாக்கெட்டுகள் மற்றும் ஒரு ஜோடி டைவிங் கண்ணாடிகள் ஆகியவை அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

திருட்டுச் சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன், யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.