நிதி நெருக்கடி குறித்து பஸில் ராஜபக்ஷ பாராளுமன்றத்துக்கு தெரிவிக்காதது தவறு: லக்‌ஷ்மன் கிரியல்ல

Mayoorikka
2 years ago
நிதி நெருக்கடி குறித்து பஸில் ராஜபக்ஷ பாராளுமன்றத்துக்கு தெரிவிக்காதது தவறு: லக்‌ஷ்மன் கிரியல்ல

நாட்டு நிதி நிலைவரம் தொடர்பில் நிதி அமைச்சர், பாராளுமன்றத்துக்கு தெரியப்படுத்தாமல் இருப்பது பெரும் அநீதியாகும் என்று எதிரணி பிரதம கொறடாவான பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு:

அரச நிதி அதிகாரம் என்பது பாராளுமன்றத்துக்கே இருக்கின்றது. நிதி அமைச்சர் பாராளுமன்றத்துக்கு பொறுப்பு கூற கடமைப்பட்டுள்ளார்.

நாட்டில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இறுதியாக டிசெம்பர் 10 ஆம் திகதியே நிதி அமைச்சர் சபையில் உரையாற்றினார். இரு மாதங்கள் ஆகின்றன. நாட்டு நிதி நிலைமை பற்றி அவர் கதைக்கவில்லை. இது பெரும் அநீதியாகும். ஊடகங்கள் வாயிலாகவே தகவல்கள் பெற வேண்டியுள்ளது. ஆக நாட்டில் என்ன நடக்கின்றது என்றார்.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு