மின்வெட்டுக்கு எதிராக நீதிமன்றத்தை நாட கோரிக்கை!
Mayoorikka
2 years ago
இலங்கையில் அறிவிக்கப்பட்ட கால அட்டவணையை மீறி மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதற்கு எதிராக பொது மக்கள் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்ய முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மின்வெட்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு கவலையை ஏற்படுத்தும் என அவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது கூறியுள்ளார்.
வெவ்வேறு நேரங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதால் இந்த விடயம் தொடர்பில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தொடர முடியும் எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
மேலும், உயர்தர பரீட்சை முடியும் வரை மார்ச் 5ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதை நிறுத்துமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.