அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்து வகைகளை கொள்வனவு செய்ய இந்தியாவிடம் இருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி

Prasu
2 years ago
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்து வகைகளை கொள்வனவு செய்ய இந்தியாவிடம் இருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்து வகைகளை கொள்வனவு செய்வதற்காக இந்தியாவினால் வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ள ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி தொடர்பான உடன்படிக்கையை எதிர்வரும் சில தினங்களில் கைச்சாத்திட எதிர்பார்த்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவிக்கின்றது.

இந்த கடனுதவியை பெற்றுக்கொள்வது தொடர்பான உடன்படிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் S.R.ஆட்டிகல தெரிவிக்கின்றார்.

இதன்படி, குறித்த உடன்படிக்கை இந்தியா அல்லது இலங்கையில் வைத்து விலைவில் கைச்சாத்திடப்படும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இதேவேளை, இலங்கை எதிர்நோக்கியுள்ள நிதி நெருக்கடியை தீர்க்கும் வகையில், தமது நாடு முதலீடு செய்ய விருப்பத்துடன் உள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெயசங்கர் தெரிவிக்கின்றார்

இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இந்த தருணத்தில், இலங்கைக்கு உதவிகரம் நீட்ட இந்தியா தயாராக உள்ளதென இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன