சுத்தமான யாழ்ப்பாண நல்லெண்ணெயில் பொரித்த கத்தரிக்காய் சோறு செய்முறை / Eggplant cooked rice !

#Cooking #Vegetable #rice
சுத்தமான யாழ்ப்பாண நல்லெண்ணெயில் பொரித்த கத்தரிக்காய் சோறு செய்முறை / Eggplant cooked rice !

தேவையான பொருள்கள் :

  • அரிசி - 1/4 கிலோ,
  • கத்தரிக்காய் - 5,
  • கரம் மசாலா - 1 டீஸ்பூன்,
  • புளி கரைசல் - ஒரு மேசைக்கரண்டி (கெட்டியாக),
  • காய்ந்த மிளகாய் - 6,
  • கடலை பருப்பு - 1 டீஸ்பூன்,
  • உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்,
  • தனியா - 2 டீஸ்பூன்,
  • சீரகம் - 1/2 டீஸ்பூன்,
  • தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன்,
  • எள் - 1/2 டீஸ்பூன்,
  • கடுகு - 1/2 டீஸ்பூன்,
  • கறிவேப்பிலை - சிறிது,
  • மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
  • நெய் - 2 டீஸ்பூன்,
  • உப்பு - தேவைக்கேற்ப,
  • எண்ணெய் - 3 டீஸ்பூன்.

செய்முறை :

  1. சாதத்தை உதிர் உதிராக வடித்து, 1 ஸ்பூன் நெய் கலந்து, ஆற விடவும். கத்தரிக்காயை பொடியாக நறுக்கவும்.
  2. 1 ஸ்பூன் எண்ணெயில் மிளகாய், தனியா, கடலைப் பருப்பு, சீரகம், தேங்காய் துருவல் சேர்த்து சிவக்க வறுத்து பொடித்து வைக்கவும்.
  3. எள்ளைத் தனியாக படபடவென பொரியும் வரை வறுத்து எடுத்து பொடித்து வைக்கவும்.
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு கறிவேப்பிலை தாளித்து, கத்தரிக்காய், மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து வதக்கவும்.
  5. கத்தரிக்காய் நன்கு வெந்து, வதங்கியதும், பொடித்து வைத்த பொடிகள், கரம் மசாலா, புளி கரைசல் சேர்த்து வதக்கி, ஆறிய சாதம் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.