சற்று வித்தியாசமான முறையில் கேரளா சிக்கன் ரோஸ்ட் மசாலா சமைத்துப்பாருங்கள்...
#Cooking
#Chicken
#curry
Mugunthan Mugunthan
2 years ago
தேவையான பொருட்கள்:
- சிக்கன் – 500 கிராம்
- வெங்காயம் – 2 (நறுக்கியது)
- சோம்பு – 1/2 டீஸ்பூன்
- பச்சை மிளகாய் – 2
- இஞ்சி பூண்டு பேஸ்ட் – 3 டீஸ்பூன்
- மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
- மல்லித் தூள் – 2 டீஸ்பூன்
- கரம் மசாலா/சிக்கன் மசாலா – 1 1/2 டீஸ்பூன்
- கறிவேப்பிலை – சிறிது
- எண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
ஊற வைப்பதற்கு…
- மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
- காஷ்மீரி மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
- மல்லித் தூள் – 2 டீஸ்பூன்
- எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
செய்முறை:
- முதலில் சிக்கன் நன்கு சுத்தமாக நீரில் கழுவி, நீரை முற்றிலும் வடித்த பின், அதனை தனியாக வைத்துக் கொள்ளவும்.
- பின் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதில் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, சிக்கன் துண்டுகளை போட்டு பிரட்டி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
- பின் அந்த சிக்கனை குக்கரில் போட்டு, அடுப்பில் வைத்து, 1 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும்.
- பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.
- பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் சேர்த்து 2-3 நிமிடம் வதக்கவும். பின் அதில் மசாலாப்பொடிகள் அனைத்தையும் சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி 2-3 நிமிடம் கிளறி விட வேண்டும்.
- அடுத்து அதில் குக்கரில் உள்ள வேக வைத்த சிக்கனை சேர்த்து நன்கு கிளறி, மிதமான தீயில் மூடி வைத்து 5-6 நிமிடம் வேக வைக்கவும்.
- எண்ணெய் தனியாக பிரியும் போது அதனை இறக்கி பரிமாறினால், கேரளா சிக்கன் ரோஸ்ட் மசாலா ரெடி!!!