இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 26-02-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 26-02-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-உழைப்பு

வானத்தை பாருங்கள்
நாம் தனித்து இல்லை
இந்த பிரபஞ்சம் முழுவதும்
நம்மிடம் நட்பாக உள்ளது.
கனவு காண்பவர்களுக்கு
உழைப்பவர்களுக்கு மட்டுமே
சிறந்தவற்றை வழங்குகிறது.

பொன்மொழி - 02 -

தலைப்பு:-உறவு

விளக்கம் கொடுத்து
தக்க வைப்பதை விட
விலகி நின்று
புன்னகை செய்வது சிறந்தது!
சில நேரங்களில்
சில உறவுகளிடம்!

பொன்மொழி - 03 -

தலைப்பு:-அன்பு

பேராசை முடிகின்ற இடத்தில்
மகிழ்ச்சி தொடங்குகிறது.
புன்னகை தொடங்கும் இடத்தில்
வாழ்க்கை தொடர்கிறது.
அன்பு இருக்கும் இடத்தில்
அனைத்தும் கிடைக்கிறது.

பொன்மொழி - 04 -

தலைப்பு:-சொல்

ஒருவரின்
குறையை
தனிமையில் 
சொல்!

குணத்தை
கூட்டத்தில்
சொல்!

பொன்மொழி - 05 -

தலைப்பு:-வாய்

கை தவறினால்
கண்ணாடி
பொருள் உடையும்
என்று பாதுகாப்பாக
இருப்பவர்கள்
வாய் தவறினால்
மனம் உடையும்
என்று ஏனோ 
உணர்வதில்லை!.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4