இன்றைய வேத வசனம் 28.02.2022: சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு
நான் ஒரு சிறிய அரங்கத்தில் பிரசங்கிக்கும்படி அழைக்கப்பட்டிருந்தேன். அந்த சிறிய அரங்கத்தை நோக்கிப் பார்த்தபோது, ஆங்காங்கே சிலர் மற்றவர்களோடு பேசிக் கொண்டிருப்பதை பார்த்தேன்..
கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்த செயலாளரிடம் அவர்கள் யார் என்று நான் கேட்டேன்.
"அவர்கள் பல இடங்களில் வேலை செய்பவர்கள். இப்போது ஊழியம்செய்யும்படி வந்திருக்கிறார்கள்." என்று அவர் கூறினார்.
இப்படித் தன்னார்வத்தோடு முன்வந்திருக்கும் இவர்கள் அந்த அரங்கத்தில் ஆங்காங்கே சென்று ஆத்துமாக்களைத் தேடிக் கொண்டிருந்தார்கள்.
யாரேனும் ஒருவர் ஆர்வம்கொண்டால், அவருக்கு இயேசுவின் நற்செய்தியை கூறி கிறிஸ்துவுக்குள் ஆதாயப்படுத்தினார்கள்.
அந்த வேளையில் 50 ஊழியர்களில் 41 பேர் குட்டிப் பிரசங்கங்களைச் செய்து கொண்டிருந்தார்கள்.
இப்படி சபையார் அனைவரும் ஊழியத்தில் ஈடுபட்டால் அது மிகுந்த ஆத்தும அறுவடையை கொடுக்குமல்லவா?
சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு. (#II_தீமோத்தேயு 4:2)