முடிவுக்கு வரும் உக்ரைன் - ரஷ்யா போர்? பேச்சுவார்த்தைக்கு ஒப்புதல்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தளபதி விஜய்யை அடுத்து தனுஷ் திரைப்படத்திற்கு கிடைத்த பெருமை குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பிரபலங்களின் திரைப்படத்திற்கு சமூக வலைதளமான டுவிட்டரில் எமோஜி பெற்று வருவது கடந்த சில ஆண்டுகளாக வழக்கமாக இருந்து வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’காலா’ தளபதி விஜய் நடித்த ’மெர்சல்’ உள்பட ஒரு சில தமிழ் திரைப்படங்களுக்கு டுவிட்டரில் எமோஜி பெறப்பட்டது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் தற்போது தனுஷ் நடித்துள்ள ’மாறன்’ திரைப்படத்திற்கும் எமோஜி பெற்று உள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் சத்யஜோதி பிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ட்விட்டரில் மாறன் என்று டைப் செய்தாலே எமோஜி தானாகவே தோன்றும் என்பது இதன் சிறப்பாகும்.
இந்த நிலையில் ’மாறன்’ திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து தனுஷ் ரசிகர்கள் இந்த படத்தின் டிரைலரை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தனுஷ், மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட், மகேந்திரன், அமீர் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷ் இசை அமைப்பில் பிரசன்னா படத்தொகுப்பில் விவேகானந்தன் சந்தோசம் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் விரைவில் ஹாட்ஸ்டார் டிஸ்னி ஓடிடியில் வெளியாக உள்ளது.