தனிப்பட்ட தகராறு காரணமாக தந்தையை கொலை செய்த மகன்
Mayoorikka
2 years ago
தந்தை ஒருவரை அவரது மகன் தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று குருவிட்ட பிரதேசத்தில் பதிவாகி உள்ளது. தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 26 ஆம் திகதி படதொட்ட பிரதேசத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் பாதிக்கப்பட்டவரின் மனைவி குருவிட்ட பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
மரணம் சந்தேகத்திற்குரியது என குறித்த பெண் குருவிட்ட பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். குருவிட்ட பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து இந்த மரணம் கொலை என தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் குருவிட்ட, படதொட்ட பகுதியைச் சேர்ந்த 57 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதனையடுத்து சந்தேக நபரின் 22 வயது மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குருவிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்