இலங்கையில் சிக்குண்டுள்ள உக்ரைன் மக்களிற்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ள இலங்கை மக்கள்!

Nila
2 years ago
இலங்கையில் சிக்குண்டுள்ள உக்ரைன் மக்களிற்கு  ஆதரவை வெளிப்படுத்தியுள்ள இலங்கை மக்கள்!

இலங்கையில் சிக்குண்டுள்ள உக்ரைன் மக்களிற்கு பெருமளவு ஆதரவை வெளிப்படுத்தியுள்ள இலங்கை மக்கள், அவர்களிற்கு இலவச தங்குமிடங்களையும் உணவுகளையும் வழங்கிவருகின்றனர்.

உக்ரைன் மீது  ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் இன்று ஐந்தாவது நாளாகவும் போர் நீடித்து வருகின்றது. இந்த நிலையில் சுற்றுவாவுக்கு வந்து இலங்கையில் சிக்குண்டுள்ள உக்ரைன் மக்களின் விசாவை நீடிப்பதா என்பது குறித்து இன்று அமைச்சரவை தீர்மானிக்கும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அதற்கான கட்டணத்தை செலுத்தவேண்டுமா என்பது குறித்தும் அமைச்சரவை தீர்மானிக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் தங்கள் நாட்டின் நிலமை சுமுகமாகும் வரை இலங்கையில் சிக்குண்டுள்ள உக்ரைன் மக்கள் , மோதல் முடிவிற்கு வந்து விமானசேவைகள் மீண்டும் ஆரம்பிக்கும்வரை தாங்கள் தங்கியிருப்பதற்கு இலவசமாக இடங்களை வழங்குமாறு  வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஹோட்டல்களும் தனிநபர்களும் தற்போது இலங்கையில் சிக்குண்டுள்ள உக்ரைன் பிரஜைகளிற்கு இலவச தங்குமிடங்களையும் உணவினையும் வழங்க முன்வந்துள்ளனர்.

அந்தவகையில் களுத்துறையில் ஐந்து படுக்கையறைகளை கொண்டமாளிகையொன்றின் உரிமையாளர் இலவசதங்குமிடங்களையும் உணவையும் வழங்க முன்வந்துள்ளார்.

அதேபோல அம்பேவலவில் உள்ள பண்ணையொன்று இலங்கையி;ல சிக்குண்டுள்ள உக்ரைன் பிரஜைகளிற்கு தங்குமிடங்களை வழங்க முன்வந்துள்ளது. இதேபோன்று அறுகம் குடாவிலிருந்தும் வெளியாகியுள்ளது.

இலங்கையை சேர்ந்த பல தனிநபர்கள் முகப்புத்தகங்களில் இலவச தங்குமிடங்கள் உணவுகளிற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை இலங்கையில் சிக்குண்டுள்ள உக்ரைன் பிரஜைகளிற்கு இலவச தங்குமிடங்களை வழங்குவதற்கு அரசாங்கம் இன்னமும் தீர்மானிக்கவில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

எனினும் தனிநபர்கள் தாங்கள் விரும்பினால்அவ்வாறான உதவிகளை செய்யலாம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.