சாலைகளில் உள்ள வழிகாட்டி பலகைகளில் ஏற்பட்ட மாற்றத்தால் வழி தெரியாமல் சுற்றி திரியும் ரஷிய வீரர்கள்!

Keerthi
2 years ago
சாலைகளில் உள்ள வழிகாட்டி பலகைகளில் ஏற்பட்ட மாற்றத்தால் வழி தெரியாமல் சுற்றி திரியும் ரஷிய வீரர்கள்!

உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 5-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. 

நேற்று, உக்ரேனிய சாலை பராமரிப்பு நிறுவனம் ரஷிய தாக்குதலைத் தாமதப்படுத்தும் முயற்சியில், ரஷிய படைகளை குழப்புவதற்காக அனைத்து சாலைகளில் உள்ள வழிகாட்டி பலகைகளில் திருத்தங்களை செய்தது.

சாலையில் உள்ள வழிகாட்டி பலகைகளை பயன்படுத்தி எளிதில் செல்ல வேண்டிய இடத்தின் வழியை அறிந்து கொள்ளமுடியும் என்பதால் அதில் உள்ள திசைகளை மாற்றியும், இடங்களின் பெயருக்கு பதிலாக ரஷியாவிற்கு திரும்பி செல் என்பன போன்ற வாசகங்களை எழுதின.

இந்நிலையில், இன்று அதிகாலை ஏஎப்பி செய்தி நிறுவனத்தால் பகிரப்பட்ட 24 வினாடி வீடியோவில், கிவ்வின் புறநகரில் உள்ள உக்ரேனிய பொதுமக்கள் ரஷிய டாங்கிகள் நகர்வைத் தடுப்பதைக் காண முடிந்தது. தகவல்களின்படி, ரஷிய வீரர்கள் வழிகளைக் கேட்பதற்காக நிறுத்தப்பட்டதாகவும், அவர்கள் கெய்வ் நோக்கி நகர்வதைத் தடுக்க உள்ளூர் மக்களால் சூழப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.