27 நாடுகள் அடங்கிய ஐரோப்பிய யூனியனின் இணைவதற்கான உக்ரைனின் விண்ணப்பம் குறித்து இன்று வாக்கெடுப்பு

Keerthi
2 years ago
27 நாடுகள் அடங்கிய ஐரோப்பிய யூனியனின் இணைவதற்கான உக்ரைனின் விண்ணப்பம் குறித்து இன்று வாக்கெடுப்பு

நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ரஷியா, அந்நாடு மீது போர் தொடுத்துள்ளது. உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 6-வது நாளை எட்டியுள்ளது.  இதுவரை தனியாக நின்று உக்ரைன் போராடி வருகிறது. ஐரோப்பிய யூனியன் நாடுகள், உலக நாடுகளிடம் உதவி கேட்டு வருகிறது. தற்போது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் வழங்க சம்மதம் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில்,  ஐரோப்பிய யூனியனில் இணைவதற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்சி கையெழுத்திட்டுள்ளார். இந்த நிலையில் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் வீடியோ மூலம் பேசிய ஜெலன்ஸ்சி, ‘‘நீங்கள் இல்லாமல் நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம். நீங்கள் எங்களோடு இருப்பதை நிரூபியுங்கள். எங்களை போக விட மாட்டீர்கள் என்பதை நிரூபியுங்கள். 

நீங்கள் உண்மையிலேயே ஐரோப்பியர்கள் என்பதை நிரூபியுங்கள். அப்போதுதான் மரணத்தை வாழ்க்கை வெல்லும். இருளை கிழித்து ஒளி பிறக்கும். உக்ரைனுக்கு மகிமை உண்டாகும்’’ என ஐரோப்பிய நாடுகளை வலியுறுத்தியுள்ளார். 27 நாடுகள் அடங்கிய ஐரோப்பிய யூனியனின் இணைவதற்கான உக்ரைனின் விண்ணப்பம் குறித்து இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.