ரஷ்யா மீது பொருளாதார தடை.. பிரபல நாட்டின் அறிவிப்பு..!!

Keerthi
2 years ago
ரஷ்யா மீது பொருளாதார தடை.. பிரபல நாட்டின் அறிவிப்பு..!!

ரஷ்யா மீது போடப்பட்டுள்ள பொருளாதார தடைகளுக்கு சீனாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்து உள்ளது.

இதனால் கனடா, அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளனர். மேலும் ரஷ்ய வங்கிகள் சில பெரும்பாலான சர்வதேச நிதி பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தும் கட்டணம் முறையான 'ஸ்விப்ட்' அமைப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ரஷ்யா பொருளாதார தடைகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தற்பொழுது பொருளாதார தடை நடவடிக்கைகளுக்கு சீனாவும் கண்டித்துள்ளது.

இந்நிலையில் நேற்று சீன வெளியுறவு செய்தியாளர் கூறியதாவது. "சீனா பொருளாதார தடைகளை பிரச்சனைகள் தீர்ப்பதற்கு பயன்படுத்துவதை எதிர்த்து வருகிறது. மேலும் ஒருதலைப்பட்சமாக சர்வதேச சட்டங்களுக்கு எதிராக இத்தகைய தடைகளை கடுமையாக எதிர்க்கிறது" என்று கூறியுள்ளார்