இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 02-03-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 02-03-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-அறிவாளிகள்

கோவில் வாசலில்
இருந்தாலும்
கடவுளிடம்
கேட்காமல்
மனிதர்களிடம்
கையேந்தும்
பிச்சைக்காரர்கள்
உண்மையான 
அறிவாளிகள்.

பொன்மொழி - 02 -

தலைப்பு:-முயற்சி

ஆழம் குறைவோ அதிகமோ
அடிக்க வேண்டியது
நீச்சல் மட்டுமே,
சோதனைகள் ஒன்றோ பலவோ
செய்ய வேண்டியது
முயற்சி மட்டுமே!

பொன்மொழி - 03 -

தலைப்பு:-திருட்டு

பணக்காரன் ஏழையிடம் திருடும் போது
அது வணிகம் 
அரசு ஏழையிடம் திருடும் போது அது 
வரி
ஏழை அந்த இரண்டிற்கும் எதிராக 
போராடினால், அது வன்முறை
என அழைக்கப்படுகிறது...!

- மார்க் ட்வைன்

பொன்மொழி - 04 -

தலைப்பு:-மனம்

அழகான முகம் வயதாகிப்
போகலாம்...
கட்டுக்கோப்பான உடல்
இழக்கப்பட்லாம்...
வைத்திருக்கும் வசதிகள்
கூட காணாமல்
போய்விடலாம்...
ஆனால் மனதால் அழகானவர்கள்
மரணம் வரை
சிறந்தவர்களே....

பொன்மொழி - 05 -

தலைப்பு:-வாழ்க்கை

வாழ்க்கையை அடிக்கடி
திரும்பிப் பாருங்கள்
நாம் அடைந்த
வலிகளும் அதனைக்
கடந்த வழிகளும்
நமக்கு நம்பிக்கையுட்டும்.