ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக சிறுவர்களையும் கைதுசெய்கின்றாரா புட்டின்?

Nila
2 years ago
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக சிறுவர்களையும் கைதுசெய்கின்றாரா புட்டின்?

ரஷ்யாவில் யுத்தத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதற்காக கைதுசெய்யப்பட்டவர்களில் சிறுவர்களும் உள்ளதை காண்பிக்கும்படங்கள் வெளியாகியுள்ளன.

யுத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களிற்காக கைதுசெய்யப்பட்டவர்கள்மத்தியில் வானில் சிறுவர்களும் காணப்படுவதை காண்பிக்கும் படங்களை ரஸ்ய அரசியல்வாதியொருவர் வெளியிட்டுள்ளார்.

மாற்றுக்கருத்து உடன்பட மறுப்பதை சிறிதளவும் சகித்துக்கொள்ளும் தன்மை புட்டின் அரசாங்கத்திற்கு இல்லாத போதிலும் பெருமளவு மக்கள் தொடர்ந்தும் ரஸ்யாவில் யுத்தத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில்ஈடுபட்டு கைதுசெய்யப்படுகின்றனர்.

ஐம்பது நகரங்களில் 7000க்கும் அதிகமானவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என ரஷ்யாவில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களை கண்காணித்து பதிவு செய்யும் ஓவிடிஎன்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

செவ்வாய்கிழமை கைதுசெய்யப்பட்டவர்களில் குழந்தைகளும் உள்ளதை புகைப்படங்கள் வெளிப்படுத்தியுள்ளன என  இல்யா யசின் என்ற அந்த நாட்டு அரசியல்வாதி தெரிவித்துள்ளார்.

மூன்று பிள்ளைகளை படத்தில் காணமுடிகின்றது அவர்கள் ஆரம்ப வகுப்புமாணவர்களாகயிருக்கவேண்டும்,மொஸ்கோ பொலிஸ்வானில் அமர்ந்திருக்கும் அவர்களின் கரங்களில் பதாகைகளும் பூக்களும் உள்ளன .

அவர்கள் உக்ரைன் தூதரகத்தின் முன்னால் மலர்களை வைக்க சென்றனர் என செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிறுமியொருவரின் கையில் ரஸ்யா யுத்தம் வேண்டாம் என்ற பதாகை காணப்படுகின்றது.

அந்த வாக்கியங்களிற்கு அருகில் உக்ரைன் கொடிகள்வரையப்பட்டுள்ளன.

ரஸ்யா உக்ரைன் சமன் - அன்பு என்ற வாக்கியமும் காணப்படுகின்றது.

அந்த சிறுமி பொலிஸ்வாகனத்தின் பின்பகுதியில் வாங்கு ஒன்றில் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் அமர்ந்திருக்கின்றார்,அவருக்கு அருகில்உள்ள இரு சிறுவர்களும் அதேபோன்று அமைதியாக காணப்படுகி;ன்றனர்.

இடது பக்கத்தில் பி;ங் ஆடையுடன் காணப்படும் சிறுமியிடம் பூக்கள்காணப்படுகின்றன,அவரிடம் பதாகையும் காணப்படுகின்றது.

மற்றொரு படம்இளஞ்சிவப்பு நிற ஆடை அணிந்த சிறுமி வானிற்குள் உலோககம்பிகளிற்கு அப்பால் நிற்பதை காண்பிக்கின்றது,அழுதிருக்கின்றாள் என கருதக்கூடிய விதத்தில் அவளது முகம் சிவந்துள்ளது.

இரு சிறுவர்களும் கறுப்பு உடையில் இரு ரஷ்ய பொலிஸாரும் காணப்படுகின்றனர்.

குறி;ப்பிட்டசீருடை அணிந்த காவல்துறையினர் ரஷ்யாவின் பல நகரங்களில் ஆர்ப்பாட்டக்காரர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

சிறுவர்கள் பொலிஸ்நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதையும்,அங்கு அமர்ந்திருப்பதையும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காணப்படுவதையும் காண்பிக்கும் படங்களும் வெளியாகியுள்ளன.

அவர்கள் வைத்திருந்த யுத்தம் வேண்டாம் பதாகைகள் நிலத்தில் காணப்படுகின்றன.பூக்களும் காணப்படுகின்றன- வானம்இருண்டு காணப்படுகின்றது.

ரஷ்ய எதிர்கட்சி தலைவருக்கு ஆதரவானவர் என்பதால் தீவிரவாதி என முத்திரை குத்தப்பட்டு தேர்தல்களில் போட்டியிடுவதற்கு தடைவிதிக்கப்பட்ட அரசியல்வாதியொருவரே இந்த படங்களை முகநூலில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

யுத்தத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டசிறுவர்கள் பொலிஸ் வாகனத்தில்உள்ளனர்,இது புட்டினின் ரஸ்யா மக்களே, நீங்கள் இங்கு வாழ்கின்றீர்கள் என அவர் பதிவிட்டுள்ளார்.

சிறுவர்களின் பெற்றோர்களையே கிரெம்ளினின் ஊடகங்கள் குற்றம்சாட்டும்,பொதுமக்களை குழந்தைகளை அரசியலில் ஈடுபடுத்தவேண்டாம் என தெரிவிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் அது அர்த்தமற்ற விடயம், என தெரிவித்துள்ள யாசின் எங்களி;ன் பல தலைமுறைக்கு பாடசாலைகளிலேயே  யுத்தமே மோசமான விடயம் என  கற்பிக்கப்பட்டுள்ளது,தலைக்கு மேலே அமைதியான வானமே மிக பெறுமதியான விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளில்தானும்தனது நண்பர்களும் யுத்தத்திற்கு எதிரான சுவரொட்டிகளை வரைந்த காலங்களை நினைவுபடுத்தியுள்ள ரஷ்ய அரசியல்வாதி யுத்தத்திற்கு எதிராக சிறுவர்கள் குரல்கொடுப்பது இயல்பான விடயம்எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை உக்ரைன் தூதகரத்தில் தாய்மாருடன் மலர்களை வைக்க சென்ற பிள்ளைகளே கைதுசெய்யப்பட்டனர் என செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நான்கு சிறுவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை செயின்ட்பீட்டர்ஸ்பேர்க்கில் தொடர்ந்தும் யுத்தத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களும் கைதுகளும்இடம்பெறுகின்றன.