உக்ரைனுக்கு 15 மில்லியன் டாலர் உதவிகளை வழங்க கூகுள் நிறுவனம் முடிவு

#Ukraine #Russia
Prasu
2 years ago
உக்ரைனுக்கு 15 மில்லியன் டாலர் உதவிகளை வழங்க கூகுள் நிறுவனம் முடிவு

உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 7-வது நாளாக நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.  அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 

ரஷிய தாக்குதலால் கடுமையான பொருளாதார இழப்புகளையும் எதிர்கொண்டு வரும் உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் உதவி புரிந்து வருகின்றன. ஆயுத உதவி, நிதி உதவியையும் அளித்து வருகின்றது.

இந்த நிலையில், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட கூகுள் நிறுவனமும் உக்ரைனுக்கு 15 மில்லியன் டாலர் நிதி உதவி அளிக்க முடிவு செய்துள்ளது. ரஷிய தாக்குதலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்ய ஏதுவாக இந்த உதவியை கூகுள் செய்துள்ளது.