இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 03-03-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 03-03-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-அவமானம்

ஓரிடத்தில் நீ அவமான படுத்தப்பட்டால்
அவ்விடத்திலிருந்து நிரந்தரமாகவே
விலகி விடு...
அன்பு, பாசம் என மீண்டும் சேர்ந்து
நின்றால் உன் அவமானங்கள்
நிரந்தரமாகிவிடும்!

பொன்மொழி - 02 -

தலைப்பு:-புரிதல்

உன்னை புரிந்து
கொள்ளாத
எதுவும் உன்னிடம்
நிலைப்பதில்லை
உன்னை 
புரிந்து கொண்ட
எதுவும்
உன்னை விட்டு
விலகுவதுமில்லை!!

பொன்மொழி - 03 -

தலைப்பு:-மனம்

கடலில் கல் எறிவதால்
கடலுக்கு வலிப்பதில்லை
கல் தான் காணாமல்
போய் விடுகின்றது.
பரந்த மனதுடன்
இருந்தால் விமர்சிப்பவர்கள்
அதில்
காணாமல் போய் விடுவார்கள்.

பொன்மொழி - 04 -

தலைப்பு:-எதிரி

கூட்டத்தில்
1 எதிரி
இருந்தால் நீ 
வளர்கிறாய் என்று
அர்த்தம்

கூட்டமே எதிரியாக
இருந்தால்
நீ
வளர்ந்து விட்டாய் 
என்று அர்த்தம்

பொன்மொழி - 05 -

தலைப்பு:-துாசி

உன்னை துாசி என்று
நினைப்பவர்களிடம் நீ
துாசியாகவே இருந்து விடு....

அவர்கள் கண்ணில் படும்
போதெல்லாம் கண்
கலங்குவார்கள்....

ஏன் துாசியென்று
நினைத்தோம் என்று...