8ம் நாள் போர் - ரஷியா உக்கிரமான தாக்குதலுக்கு மத்தியில் உக்ரைன் பதுங்குகுழியில் ஒரு திருமணம்!
உக்ரைனில் உள்ள ஒடெசா நகரில் உள்ள வெடிகுண்டு இல்லத்தில் விமானத் தாக்குதல் சைரன்கள் காதில் ஒலிக்கும் வகையில் தம்பதிகள் திருமணம் செய்து கொண்டனர்.
உக்ரைன் மீது ரஷிய படைகள் 8 ஆவது நாளாக உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், சமூக ஊடகத்தில் இந்த திருமணத்தின் போது எடுக்கபட்ட புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன, அதில் மணமகள் புன்னகையுடன் மலர்களைப் பிடித்திருப்பதையும், அதே நேரத்தில் மணமகன் ராணுவ உடையில் ஒரு ஆவணத்தில் கையொப்பமிடுவதையும் இந்த திருமணவிழாவைக் கொண்டாட ரொட்டியைப் பகிர்வதையும் காணமுடிகிறது.
முன்னதாக, உக்ரைன் அதிகாரிகள் ரஷிய வீரர்கள் தெற்கு நகரமான கெர்சனைக் கைப்பற்றி கைப்பற்றியதை உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.