புடினுடன் தொடர்புடைய ரஷ்ய செல்வந்தரின் மிகப் பெரிய கப்பலை கைப்பற்றியது ஜேர்மனி!
Mayoorikka
2 years ago
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் தொடர்புடைய ரஷ்யாவைச் சோ்ந்த பெரும் செல்வந்தரான அலிஷர் உஸ்மானோவ் (Alisher Usmanov) என்பவருக்குச் சொந்தமான 600 மில்லியன் டொலர்கள் மதிப்புள்ள கப்பல் ஒன்றை ஜேர்மன் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
தில்பார் (Dilbar) என்று பெயரிடப்பட்ட 512 அடி நீளமான இந்தக் கப்பல் ஹாம்பர்க்கில் கைப்பற்றப்பட்டது.
ரஷ்ய அரசாங்கத்துடனான உறவுகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை விதிக்கப்பட்ட 25 முக்கிய ரஷ்யர்களுள் உலோக தொழிலதிபரான உஸ்மானோவ் ஒருவராவார்.
இந்நிலையில் ரஷ்யாவிற்கு சொந்தமான வேறு கப்பல்கள் அமெரிக்காவுடன் குற்றவாளிகளை ஒப்படைக்கும் ஒப்பந்தத்தில் இல்லாத நாடுகளை நோக்கி நகர்த்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக இந்தியப் பெருங்கடலில் உள்ள மாலைதீவு நோக்க ரஷ்யக் கப்பல்கள் நகர்வதாகவும் தெரியவருகிறது