கிராண்ட்பாஸ் காஜிமா தோட்டத்தில் மின்சாரம் திருடிய 120 பேர் கைது!
#SriLanka
#Power
#Arrest
Mugunthan Mugunthan
2 years ago
கிராண்ட்பாஸ் காஜிமாவத்தை பகுதியில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்ற 120 வீடுகளின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை மின்சார சபையின் விசாரணை அதிகாரிகள் மற்றும் கிராண்ட்பாஸ் பொலிஸாரின் கூட்டு நடவடிக்கையின் போதே இது இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருவதாக கிரவுண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் இன்று பிற்பகல் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.