சுகாதார வேலைநிறுத்தத்தின் எதிர்காலம் குறித்து இன்று பிற்பகல் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது

#SriLanka #Hospital #Employees
சுகாதார வேலைநிறுத்தத்தின் எதிர்காலம் குறித்து இன்று பிற்பகல் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது

பல கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார வல்லுநர்கள் சம்மேளனம் நேற்று ஆரம்பித்த அடையாள வேலை நிறுத்தம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்த அடையாள வேலை நிறுத்தம் முடிவுக்கு வருமா? அல்லது தொடர் வேலை நிறுத்தம் செயல்படுத்தப்படுமா? இன்று பிற்பகல் செயற்குழு கூடி முடிவெடுக்கும் என சுகாதார வல்லுநர்கள் கூட்டமைப்பு கன்வீனர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளுக்குச் செல்லும் மக்கள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு இக்கட்டான நிலையில் இருந்த பலர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளனர்.

சுகாதார நிபுணர்களின் பணிப்புறக்கணிப்பு குறித்து கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, நாட்டு மக்களை கவனத்தில் கொண்டு கலந்துரையாடி பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!