தனிநபர் ஒருவருக்கு மாதம் 5908 ரூபாய் போதுமானது-புள்ளிவிபர திணைக்களம்
Mayoorikka
2 years ago
தனிநபர் ஒருவருக்கு 5 ஆயிரத்து 908 ரூபாவில் ஒரு மாதத்திற்கான தனது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள முடியும் என அரசாங்கத்தின் சனத் தொகை மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் மாவட்டங்களுக்கு அமைய வறுமை கோடு நிலவரம் தொடர்பாக இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் ஒரு நபருக்கு மாதம் ஒன்றுக்கு 6 ஆயிரத்து 414 ரூபாய் தேவைப்படுவதுடன் மாத்தறை மாவட்டத்தில் 5 ஆயித்து 646 ரூபாய் தேவைப்படுகிறது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.