உக்ரைனில் உள்ள ரஷியர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய ஒப்புதல் வழங்கிய நாடாளுமன்றம்

Keerthi
2 years ago
உக்ரைனில் உள்ள ரஷியர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய ஒப்புதல் வழங்கிய நாடாளுமன்றம்

ரஷியாவின் படையெடுப்பால் உக்ரைனில் நாளுக்கு நாள் போர் தீவிரமடைந்து வருகிறது. இதனால், உயிரை காத்துக்கொள்வதற்காக உக்ரைன் மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை தற்போது 8.74 லட்சமாக இருப்பதாகவும், இது விரைவில் 10 லட்சத்தை எட்டும் என்றும் ஐ.நா. அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில்,  உக்ரைனில் உள்ள ரஷியர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது.  8-வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் புதிய சட்டத்தை இயற்றியது உக்ரைன் நாடாளுமன்றம்.